Posts

தமிழீழ தேசிய தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Image
          வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார்.                                                                                  உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.    

தமிழ் ஈழ மாவீரர் நாள் வீரவணக்கம் இன்றுவரை வித்தாகிய மாவீரர்களுக்கு

Image
"நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள்  எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன."    Velupillai Pirabaharan       உங்கள் உடல்கள் சாய்ந்ததால், எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்

துன்பம் கூட கடுகளவுதான்....!

Image
எத்தனை முறை என்னை கோபப்படுத்தினாலும் பரவாயில்லை..! அத்தனை முறை உன்னை பலமடங்கு நேசிக்கிறேன் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து விடு....! காதலோடு இருந்துவிடு நீ காதலோடு இருந்தால் கடலளவு துன்பம் கூட கடுகளவுதான்....!

எங்கள் அழுகைகள்....

Image
நாங்கள் கதறியழுதோம் எங்களை காப்பாற்றுங்கள் என்றல்ல எங்கள் ஈழத்தாய் மாற்றானிடம் சிறை படப் போகிறாள் என்று எங்கள் கதறல்கள்,கண்ணீர் துளிகள் பயனற்றதாக போகலாம் - ஆனால் நாங்கள் எதற்காக அழுதோமோ அதன் விளைவை அறிவார்கள்....

வெளிநாட்டு வாழ்க்கை!

Image
   வளமான நாட்டில் வழமற்ற வாழ்க்கை சொல்வாக்கு செல்லாக்காசாகி செல்வாக்கில் செழிக்கிறது வாழ்க்கை...! வாங்கிய கடனுடன் கனவுகள் சுமந்து விடியலைத்தேடி விழிகளில் நீருடன் கடல் கடந்து கால் பதிக்கிறோம் அயல் நாட்டில்..! புரியாத மொழி பழகாத மனிதர்கள் தெரிந்த முகங்களுக்கான தேடல் - கண்களில் புரிந்த பாசைக்கான  ஏக்கம்- காதுகளில் கண்களில் தூக்கம் இல்லை ஏக்கமுண்டு மனதில் மயக்கம் இல்லை தயக்கமுண்டு  பல தேச பரதேசிகளின் சங்கமத்தில் விலகுகிறது ஏக்கமும் தயக்கமும்...! காலங்கள் செல்ல செல்ல காசேதான் எல்லாம் என்ற நிலை சுருங்கிய உலகில் சுதாரித்துகொள்கிறது மனிதம் ! அம்மாவின் அன்பு அப்பாவின் அரவணைப்பு கட்டிய மனைவின் காதல் பெற்ற பிள்ளையின் பாசம் இனிய உறவுகள் பழகிய மனிதர்கள் இவைகளுக்கு எட்டாத தூரத்தில் நாம்! வாழ்க்கைக்காக வேலை அன்று வேலைக்காக வாழ்க்கை இன்று இதுதான் இயந்திர வழக்கையோ..! காலத்தின் காலடியில் கால்ப்பந்தாகவும் காற்றில் அசையும் காகிதமாகவும் அல்லாடுகிறது அயல் நாட்டு வாழ்க்கை..! மெழுகுதிரி வாழ்க்கை உருகுவது நீயாக இருந்தாலும் ஒளி உனக்கான உறவுகளுக்கே..!

அம்மா உனக்கு....

கருவறையில் எமை சுமக்கும் சுமைதாங்கி பிறவி பல கண்டு எமை ஈன்றவள் பலன் ஒன்றுமின்றி பாலூட்டுபவள் அன்பை அள்ளி வழங்குபவள் பண்பை சொல்லிதருபவள்.... தாயின் மடி இரண்டாம் கருவறை தாயின் பாதம் முதலாம் மூலஸ்த்தானம் எமை வளர்க்க தனை தேய்ப்பவள் மாதம் தோறும் பௌர்ணமி தாயின் முகம்.... கண்களால் காப்பால் கைகளால் அணைப்பால் இதயத்தால் உணர்வால் உயிரால் உறைய வைப்பால்....

நிலை தடுமாற்றம்..!

சரியெது  பிழையெது சரியாகத் தெரியவில்லை அவை அறியாததால் புது சலனங்கள் நேற்று சரியாகப்பட்டது இன்று தவறாகப்படுகிறது நேற்று தவறாகப்பட்டது இன்று சரியாக தென்படுகிறது நாளை நிலைக்க போவது என்னவோ? இரவோடு தினமும் இரைச்சல்கள், எத்தனை எண்ணங்கள் நிதமும் வந்து மோதுகின்றன சிந்தை சிதறுகிறது தெளிவோ தெறித்து ஓடுகிறது ஆத்மாவோ விசனிக்கிறது, அது தெளிவான நிலையொன்றை தேடியலைகிறது சருகென உலருது நெஞ்சம் அதில் கருகிடும் துகள்களாய் தளும்புகள் கொஞ்சம், விந்தையாக இருக்கிறது வியப்போ மேலிடுகிறது, எந்தவித காரண்மின்றி என்னையே நொந்து கொள்கிறேன்  எதற்கோ பயப்படுகிறேன் என்னவாயிருக்கும்? எதையாவது இழந்தேனா? இல்லை துயரத்தில் துவண்டு விழுந்தேனா? குறுகிய எல்லைக்குள் இருந்துவிட்டேனா? இல்லை பெருகிய ஆசைகளுக்கு இடமளித்தேனா? இச்சைகளுக்கு இசைந்தேனா? இல்லை எதையாவது துச்சமென மிதித்தேனா? குத்திடும் முட்களாய் குழப்பங்கள் அவை கிழித்து வரும் செங்குருதியாய் விசும்பல்கள்....!